×

ரூ.10 கோடி அம்பர் கிரிஸ் பறிமுதல்

மதுரை: விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் மற்றும் மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும், அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சம் (அம்பர் கிரிஸ்), மதுரை தெற்குவாசல் பகுதி மறவர் சாவடி பகுதியில் ஒரு கடையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி குருசாமி தபாலாவுக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாருடன் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் மஞ்சணக்கார தெருவை சேர்ந்த ராஜாராம் (36) என்பவருக்கு சொந்தமான கடையில் 10 கிலோ எடை கொண்ட ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட திமிங்கல எச்சத்தை சேகரித்து கொண்டு வந்து, கடையில் பதுக்கி வைத்து ராஜாராம் விற்பனை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.  அவருக்கு உடந்தையாக சுந்தரபாண்டி(36), கவி(48) ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இதையடுத்து ராஜாரம் உட்பட 3 பேரையும் கைது செய்து, அவர்கள் பதுக்கி வைத்திருந்த திமிங்கல எச்சத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


Tags : Amber Gris , Amber Chris, Forestry, Investigation
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றம்...