×

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளகாக வானிலை மையம் தெரிவித்தது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவித்தது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ,தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜீன் 24 முதல் 28ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Pondicherry ,Meteorological , 5 days moderate rainfall in Tamil Nadu and Pondicherry due to atmospheric circulation; Meteorological Center Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...