கடம்பூர் மலைப்பாதையில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: விவசாயி படுகாயம்

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி, அத்தியூர்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்(38). விவசாயியான இவர் தனது டிராக்டரில் கடம்பூரிலிருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக கடம்பூர் மலைப்பாதை வழியாக கே.என்.பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.டிராக்டரின் பின்புறம் பாரம் ஏற்றுவதற்காக ட்ரெய்லர் பொருத்தப்பட்டிருந்தது. ஊத்துக்குழி பாறை அருகே சென்ற போது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து சுமார் 30 அடி ஆழத்தில் உருண்டு சென்றது.

இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டிச்சென்ற பெருமாள் படுகாயமடைந்தார். இதைக்கண்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக கடம்பூர் போலீசாருக்கும் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடம்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் இறங்கி காயம்பட்ட பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து கடம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: