×

2002 குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுதலைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி: 2002 குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குஜராத்தின் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு ரயில் எரிக்கப்பட்ட கலவரத்தில் கிட்டத்தட்ட 59 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த கலவரம் நடந்தபோது தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அப்போது குஜராத் முதல்வராக இருந்தார்.

இந்த வன்முறையின் பின்னணியில் நரேந்திர மோடி மற்றும் உயரதிகாரிகள் இருந்ததாகக்கூறி வழக்கு தொடரப்பட்டது. இதனால் சிறப்பு புலனாய்வுக் குழு நரேந்திர மோடி மற்றும் 63 பேர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்தது. இந்த குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இல்லை என கடந்த 2012-ம் ஆண்டு நரேந்திர மோடி உள்ளிட்டவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த கலவரத்தில் கொல்லப்பட்ட எஹ்சான் ஜாஃப்ரி என்பவரது மனைவியான ஜக்கியா ஜாஃப்ரி என்பவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் 2017-ம் ஆண்டு இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ஜக்கியா ஜாஃப்ரி தரப்பில் 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் நிறைவடைந்த பின்பு, மேற்கண்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் தநீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், 002 குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். குஜராத் கலவர வழக்கில் மேல் விசாரணையும் தேவையில்லை.மோடி குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நிராகரிக்கிறோம். விசாரணைக் குழுவின் அறிக்கையை ஏற்று, பிரதமர் மோடி உள்ளிட்ட 64 பேரை விடுவித்ததை உறுதி செய்த நீதிமன்ற மேஜிஸ்திரேட் உத்தரவு சரியே,என்று தெரிவித்துள்ளது.



Tags : Supreme Court ,Modi ,Gujarat riots , Gujarat, riots, Prime Minister Modi, release, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...