×

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், பல நாடுகளில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மராட்டியத்தில் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாக மாறியுள்ளது. நேற்று மராட்டியத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளது. டெல்லியில் 2000ஐ கடந்துள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு 10-15% அளவிற்கு மட்டுமே உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிர் பாதிப்பு குறைவாகவே உள்ளது; BA 4, BA 5 உயிர்கொல்லியாக இல்லாமல் வேகமாக பரவும் தன்மை கொண்டது. மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது கொரோனா அறிகுறி இருக்கிறதா? என கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆர்டிபிசிஆர் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் 18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை மீண்டும் கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படும்,என்றார்.

Tags : Minister ,Ma Subramanian , Children, Cold, Fever, Throat, Irritation, Minister Ma. Subramanian
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...