உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி விட வேண்டும் : தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவு!!

சென்னை : உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு  தமிழக போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக,பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ,சாலையின் நடுவிலோ பேருந்தை நிறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் பேருந்துகளை சாலையின் இடதுபுறமாக உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சாலையின் நடுவிலோ அல்லது பேருந்து நிறுத்தத்தை விட்டு சிறிது தூரம் தள்ளி பேருந்துகளை நிறுத்துவதால் பயணிகள் சிரமத்துடன் ஓடிச் சென்று பேருந்துக்குள் ஏறும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.

இதனால் பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது. இதனால் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களும் சாலையின் இடதுபுறமாக உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்கி விட வேண்டும். மேலும் பேருந்தை சாலைகளின் நடுவிலோ அல்லது பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை நிறுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: