நயன்தாராவுடன் நடிக்கிறார் தீபிகா படுகோன்

மும்பை: இந்தி படத்தில் நயன்தாராவுடன் தீபிகா படுகோன் நடிக்க உள்ளார். ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை அட்லீ இயக்குகிறார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் நயன்தாரா. இதே படத்தில் ராணா, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு, சுனில் குரோவர் உள்பட பலர் நடிக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, வைரலானது. இந்த படத்தை இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் திரைக்கு கொண்டு வருகின்றனர்.

படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடிக்க தீபிகா படுகோன் இருந்தால் நன்றாக இருக்கும் என அட்லீ விரும்பினார். ஷாருக்கானுக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. இதையடுத்து ஷாருக்கானும் அட்லீயும் தீபிகாவை மும்பையில் நேரில் சந்தித்து பேசினர். ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம்தான் இந்தியில் தீபிகா அறிமுகம் ஆனார். இப்போது பதான் படத்திலும் அவர் ஷாருக்கானுடன் நடித்திருக்கிறார். அந்த வகையில் இந்த படத்திலும் நடிக்க தீபிகா சம்மதித்துள்ளார். காட்சிப்படி நயன்தாரா, தீபிகா இணைந்து நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

Related Stories: