லேடி பவர் ஸ்டார் பட்டம் வேண்டாம்: சாய் பல்லவி மறுப்பு

ஐதராபாத்: லேடி பவர் ஸ்டார் என்ற பட்டம் தனக்கு வேண்டாம் என சாய் பல்லவி மறுத்துள்ளார். ராணாவுடன் விராட பர்வம் தெலுங்கு படத்தில் நக்சல் பெண்ணாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்துக்கான புரமோஷன்களில் சாய் பல்லவியை லேடி பவர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த திரைப்பட விழா ஒன்றில், பவன் கல்யாண் பவர் ஸ்டார் என்றால் சாய் பல்லவி லேடி பவர் ஸ்டார் என புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் கூறினார். அப்போது முதல் ரசிகர்கள் அவரை லேடி பவர் ஸ்டார் என அழைத்து வருகிறார்கள். இயக்குனர்கள் சிலர் தங்களது படத்தில் லேடி பவர் ஸ்டார் சாய் பல்லவி என குறிப்பிட அவரிடம் அனுமதி கேட்டு வருகிறார்கள்.

இது பற்றி சாய் பல்லவி கூறும்போது, ‘சினிமாவில் நடிப்பது எனது வேலை. அதற்காக சம்பளம் பெறுகிறேன். அதை விட்டுவிட்டு, எனக்கு பட்டம் கொடுப்பது, அதை மற்றவர்கள் என்னை புகழ்வதற்காக பயன்படுத்துவது, ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும். அந்த மாதிரியான செயல்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ரசிகர் மன்றத்தில் எனக்கு எந்த ஆசையும் கிடையாது. ஈடுபாடும் கிடையாது. அதனால் என்னை லேடி பவர் ஸ்டார் என்றெல்லாம் அழைக்க வேண்டாம் என எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

Related Stories: