சிறந்த மருத்துவ படிப்புகளுக்கு விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ்

மருத்துவ துறை சார்ந்த கல்வி சேவையை தொடர்ந்து 18 ஆண்டுகளாக சிறப்பாக ஆற்றி வரும் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம் மற்றும் சென்னை ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் செயல்பட்டு வரும் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் சிறப்பம்சங்கள் குறித்து டீன் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:

பள்ளி கல்வியினை வெற்றிகரமாக முடித்து, தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உயர்கல்வியை தேர்ந்தெடுக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு, சிறந்த வேலைவாய்ப்பினை வழங்கும் மருத்துவ துறை சார்ந்த படிப்புகளை, தகுதிமிக்க பேராசிரியர்களின் உதவியோடு சிறப்பான முறையில் வழங்கி வருகிறோம்.

இத்துறை சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் சேர +2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது எங்கள் துறையின் மூலம் மயக்க மருந்தியியல், இருதய பரிசோதனை பிரிவு, மருந்து ஆய்வக பிரிவு, கண்ஒளியியல் பிரிவு, அறுவை அரங்கப் பிரிவு, நரம்பியல் பிரவு, கதிரியக்க பிரிவு, கதிரியக்க சிகிச்சை பிரிவு, அணுக்கரு மருந்தியியல் பிரிவு, சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, தடய அறிவியல் தொழிற்நுட்ப பிரிவு, மருத்துவ உதவியாளர் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை போன்ற இளங்கலை பாடப்பிரிவுகளும் இதனை சார்ந்த சில முதுகலை பாடப்பிரிவுகளையும் கடந்த 18 ஆண்டுகாலமாக சிறப்பான முறையில் வழங்கி வருகிறோம். 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு டிப்ளமோ (மருத்துவ ஆய்வக தொழிற்நுட்ப பிரிவு, கதிரியக்கவியல், அறுவை அரங்கம் மற்றும் மயக்க மருந்தியியல் பிரிவு) பாடப்பிரிவுகளும் எங்கள் துறையின் மூலம் வழங்கப்படுகிறது. எங்களின் சிறந்த கல்வி சேவையினை உறுதிசெய்யும் விதமாக இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தெற்கு ஆசிய அமைப்பானது ஐஎஸ்ஓ சான்றிதழை நிறுவனத்தின் கல்வி சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் ஆராய்ந்து வழங்கியுள்ளது.

இந்தியாவிலேயே இத்தகைய தரச்சான்றிதழை முதலாவதாக பெற்ற ஓர் நிறுவனம் இதுவே. மாணவர்கள் முதலாமாண்டு பயிலும் போதே அவர்களின் துறை சார்ந்த தொழிற்நுட்ப அறிவை மேம்படுத்த ஒவ்வொரு துறை பிரிவுகளின் மூலம் மேம்படுத்தப்பட்ட செயல்முறை மருத்துவ ஆய்வக மாதிரிகளை நிறுவி அதன் மூலம் முறையான பயிற்சிகளை அளித்து வருகிறோம். எங்கள் துறையை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று கூடுதல் துறை சார்ந்த படிப்பிற்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர். எங்கள் துறையின் சிறந்த கல்வி சேவையையும் செயல்பாடுகளையும் அங்கீகரித்து, பல்வேறு அமைப்புகள் விருதுகளை வழங்கி உள்ளது. குறிப்பாக ”தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவ துறை சார்ந்த கல்லூரி” ”சிறந்த வேலைவாய்ப்பிற்கான நிறுவனம்,” ‘‘தென்னிந்தியாவின் சிறந்த வேலைவாய்ப்பிற்கான நிறுவனம்” போன்ற 10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளோம்.

மேலும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்விகடன் வசதி, தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வசதி, ஆண், பெண் இருபாலருக்குமான தனிதனி விடுதி வசதிகள், சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவை சிறந்த முறையில் ஏற்பாடு ெசய்யப்பட்டுள்ளது. பொறியியல் துறை மாணவர்களை போன்று எங்கள் துறை மாணவர்களும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதற்கான வாய்ப்பினை வழங்கி வருகிறோம். எங்கள் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் படிப்பினை முடித்து செல்லும்போது வெறும் பட்ட படிப்பிற்கான சான்றிதழை மட்டும் பெற்று செல்லாமல் கூடுதலாக அவர்களின் துறை சார்ந்த குறுகிய கால படிப்பிற்கான சான்றிதழ், வேலைவாய்ப்பிற்கான பாடநெறி சார்ந்த சான்றிதழ், தொழிற்துறை சார்ந்த குறுகிய கால சான்றிதழ் ஆகியவற்றோடு வேலைவாய்ப்பிற்கான பணி நியமன ஆணையோடு செல்கின்றனர்,’’ என்றார். கல்விப்பணியை சிறப்பாக ஆற்றியதற்காக துறையின் டீன் டாக்டர் செந்தில்குமாருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: