மேலகரம் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்

தென்காசி: மேலகரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் முதல் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மற்றும் மாணவர்களுக்கானவிழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  பள்ளி தலைமை ஆசிரியை கவிதா தலைமை வகித்தார். குற்றாலம் போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர்கள் கோமதிநாதன், ரத்னபால் சாந்தி, அமுதா, குழந்தைகள்  பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, பெண்கள் பாதுகாப்பு மைய  நிர்வாகி ஜெயராணி மற்றும் மேலகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜீவானந்தம் பேசினர்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட  விதிமுறைகளை மாணவர்கள் முறையாக பின்பற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளியில் 12ம் வகுப்பில் 600க்கு 578 மதிப்பெண்கள் பெற்ற மாணவி மகேஷ்வரிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் துரை மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: