கலெக்டர் அலுவலகம் முன்பு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

நாகர்கோவில்: கலெக்டர் அலுவலகம் முன்பு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலக ஜங்சனில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக கலெக்டர் அலுவலக காம்பவுண்ட் சுவர் இடித்து வேறு இடத்தில் கட்டப்பட்டது.  மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருந்த மின்மாற்றி அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

மேலும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக காம்பவுண்ட் சுவற்றை ஒட்டி மழைநீர் வடிகால் அமைக்க கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தோண்டப்பட்டது. நேற்று காங்கிரீட் போடும் பணி நடந்தது.

Related Stories: