×

போக்குவரத்துக்கு லாயக்கற்ற ஆனைவாரி சாலை: சீரமைக்க வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது ஆனைவாரி கிராமம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விருத்தாசலம் -புவனகிரி சாலையிலிருந்து இணைப்பு சாலையாக ஆனைவாரி சாலை செல்கின்றது.
 
மெயின்ரோடு பகுதியிலிருந்து ஆனைவாரி கிராம் வரை 2 கிலோமீட்டர் தொலைவிற்கு ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்றுள்ளதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் முதல் கிராம மக்கள் வரை கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து கிராம பொதுமக்கள் புவனகிரி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Anaiwari , Anaiwari road unfit for traffic: insistence on alignment
× RELATED சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!!