×

டி.பி.சத்திரத்தில் மரம் விழுந்து கார் சேதம்

அண்ணாநகர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஒரு பழமையான மரம் சாய்ந்து விழுந்தததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் டி.பி.சத்திரம் போலீசாரும் மாநகராட்சி ஊழியர்களும் விரைந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் விழுந்துக் கிடந்த மரக்கிளைகளை மெஷின் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர்.


Tags : DP Inn , Car damage due to falling tree at DP Inn
× RELATED சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்;...