×

குடும்பத்தில் சண்டை வந்தால் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பேன்-சேலம் ஆசாமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை : ‘என் குடும்பத்தில் தகராறு, சண்டை, அடிதடி நடந்தால் எனக்கு கோபம் வரும். அப்போது எடப்பாடி வீட்டில் குண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுப்பேன்’ என்று தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு விடுத்த நபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை காவல்  கட்டுப்பாட்டு அறைக்கு போன்செய்த ஒரு மர்மநபர், தாம்பரம் ரயில்  நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை  துண்டித்துவிட்டார்.

 இது குறித்து தாம்பரம் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதின்  பேரில் ரயில்வே போலீசார் மற்றும் மோப்பநாய் ரூபா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடைமேடைகள், ரயில்கள் மற்றும் பயணிகளிடம் தீவிர  சோதனை செய்தனர். நீண்டநேர சோதனைக்குப்பின் புரளி என்பது தெரியவந்தது.இதனையடுத்து  சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு  செய்தனர்.  செல்போன் எண்ணின் சிக்னல் சேலம் மாவட்டத்தை காட்டியது. அதன் உரிமையாளர் வினோத்குமார் டிரைவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து  சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சிக்னலை  வைத்து அந்த நபரை பிடித்தனர்.சேலம் அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ேபாலீசார் கூறியதாவது: சேலம் வினோத்குமார் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி  சேலையூர், பராசக்தி நகர், இரண்டாவது தெருவில் வசித்து வந்தபோது அவரது  மனைவி திவ்யாவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் திவ்யா தாம்பரம்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினோத்குமார் மீது புகார் அளித்துவிட்டு  பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து தாம்பரம் அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் இருந்து வினோத்குமாருக்கு தொடர்பு கொண்டு  விசாரணைக்கு வரும்படி அழைத்திருந்தனர்.

இதனால் மனமுடைந்த வினோத்குமார்  குடிபோதையில் அவரது செல்போனில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு  தொடர்பு கொண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு  வைத்திருப்பதாக கூறினாராம். இதனால், அப்போது சேலையூர் காவல் நிலையம் ஆய்வாளர் விஜயன்  தலைமையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர்  2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் வந்த  வினோத்குமார் இரண்டு நாள் கழித்து ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இரவு மீண்டும்  குடிபோதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவரது செல்போன் எண்ணில் இருந்து  தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும்  அது உடனடியாக வெடிக்கும் என தெரிவித்து இணைப்பை துண்டித்தார். பின்னர் அரை  மணிநேரம் கழித்து மீண்டும் தொடர்ந்து 19 முறை காவல் கட்டுப்பட்டு அறைக்கு  தொடர்புகொண்ட அவர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக  மிரட்டல் விடுத்ததால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Edappadi Palanisamy ,Salem Asami , Chennai: ‘I get angry when there are conflicts, fights and riots in my family. Then I will threaten to have a bomb in Edappadi's house '
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்