கம்பம் பகுதியில் முதல்போக நெல் சாகுபடி தொடக்கம்

கம்பம் : கம்பம் பகுதியில் முதல்போக நெல் சாகுபடி பணி தொடங்கியுள்ளது. வயல்களில் நாற்று நடும் பணியில் பெண் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்காக, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக அரசு கடந்த ஜூன் தேதி தண்ணீரை திறந்து விட்டது.

இந்த தண்ணீர் மூலம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்பிலிருந்து வீரபாண்டி வரை, மொத்தம் 14,700 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடக்கிறது. தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக கம்பம் பள்ளத்தாக்கில் நெல் சாகுபடி அதிகளவில் நடக்கும். மேலும், நெல், வாழை, தென்னை ஆகியவையும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், பெரியாறு பாசனம் மூலம் கம்பம் பகுதியில் முதல் போக நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். வயல்களில் நாற்று நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: