×

திடீர் காலநிலை மாற்றம் கோத்தகிரியில் கடும் பனி மூட்டம்; பொதுமக்கள் அவதி

கோத்தகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேற்று காலை முதலே வாகனம் மேகமூட்டத்துடன் கடுங்குளிர் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
கோத்தகிரி அதன்‌சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக  மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது‌தென்மேற்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

காலையில் கடும் குளிர் நிலவி வருகிறது. நண்பகல் முதல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் கோத்தகிரியில் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடும் பனி மூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றன.

Tags : Kotagiri , Kotagiri: A vehicle with clouds prevailed in Kotagiri in the Nilgiris district since yesterday morning. Thus causing great inconvenience to motorists
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்