×

மழைக்கால பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை.!

சென்னை: மழைக்கால பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் பெய்த மழையால் சில சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழை பாதிப்பு,எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Tags : Chief Minister ,BCE ,K. Stalin , Chief Minister MK Stalin's important advice today on monsoon damage and precautionary measures!
× RELATED புதுச்சேரியில் இருந்து மெத்தனால்...