×

ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை.. பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் : மாஜி அமைச்சர் ஜெயக்குமார்!!

சென்னை : ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை இல்லை என உத்தரவிடப்பட்டது. தீர்மான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வில் நள்ளிரவே விசாரணைக்கு வந்தது. விடிய விடிய நடைபெற்ற விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உத்தரவிட்டனர். அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.

இந்த நிலையில் நீதிபதிகளின் தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு பேசிய மாஜி அமைச்சர் ஜெயக்குமார்,அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும், ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம். பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.அதிமுகவுக்கு பின்னடைவு என்பது கிடையாது,என்றார்.
\

Tags : Maji Minister ,Jayakumar , Single Leader, General Committee, Minister, Jayakumar
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...