காவிரி ஆணைய தலைவரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: காவிரி ஆணைய தலைவரை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா, தமிழகத்தில் உள்ள அணைகளை கடந்த 8, 9ம் தேதிகளில் பார்வையிட்ட ஆணைய தலைவர் ஹல்தர், காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து கண்டிப்பாக விவாதிக்கப்படும் என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கருப்பு கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: