×

கோபி சுற்று வட்டார பகுதிகளில் ரூ.1.50 கோடி மதிப்பிலான 5 செல்போன் டவர்கள் மாயம்: சென்னை நிறுவனம் புகாரில் வழக்குப்பதிவு

கோபி: கோபியில் மாயமான ரூ.1.50 கோடி மதிப்பிலான 5 செல்போன் டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோசலகுமார் (49). இவர், சென்னையில் உள்ள ஜிஐஎல் என்ற தனியார் நிறுவனத்தில் பிராஜக்ட் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை வாங்கி உள்ளது. அதில் கோபி அருகே  ஒத்தகுதிரை, தண்ணீர்பந்தல் புதூர், நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி பிரிவு, மற்றும் மொடச்சூர் ராஜன்நகர் ஆகிய 5 இடங்களில்  ஏர்செல் நிறுவனம் அமைத்திருந்த செல்போன் டவர் மற்றும் கட்டுப்பாட்டு அறையை சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு நிறுவனம் விலைக்கு வாங்கி உள்ளது.

அந்த செல்போன் டவர்கள் அனைத்தும் கடந்த 2017 வரை பயன்பாட்டில் இருந்த நிலையில் அதன்பின் இயங்கவில்லை. இதனால், நிறுவனத்தின் பிராஜக்ட் இன்ஜினியர், கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வாங்கப்பட்ட செல்போன் டவர்கள் இயங்காமல் போனது குறித்து ஆய்வு செய்தபோது, 5 இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த டவர்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காணாமல் போன செல்போன் டவர்களை கண்டுபிடித்து தருமாறு கோபியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன 5 செல்போன் டவர்களை தேடி வருகின்றனர்.

Tags : Kopi ,Chennai , 5.50 crore cell phone towers worth Rs 1.50 crore in Kopi area: Chennai company files suit
× RELATED ‘வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு...