சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறை ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. அதில்,கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் படுவதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக புகார்கள் வந்தது. அரசாணையின்படி அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று அரசு உத்தரவிட்ட நாளிலிருந்து கோயிலில் போலீசார் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கடிதத்தால் நேற்று முதல் கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட போலீசார் கோயிலின் கனகசபை பகுதி, உள் பிரகாரம், வெளி பிரகாரம், நுழைவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: