×

கனமழையால் கரை புரளும் ஆறுகள் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் பறி போனது

உதம்பூர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு, பல இடங்களில் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தின் காரணமாக ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. உதம்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 150 அடி தூர சாலை அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதனிடையே, ரம்பன்- உதம்பூர் மாவட்டங்களில் 270 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 33 இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களை இணைக்கும் முகால் சாலையும் நிலச்சரிவு காரணமாக நேற்று மூடப்பட்டது.


Tags : Jammu National Highway , Rivers flooded by heavy rains inundated the Jammu National Highway
× RELATED ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் டிபன்பாக்ஸ் வெடிகுண்டு