×

மகாராஷ்டிரா முதல்வர், கவர்னருக்கு கொரோனா

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் நிலை உருவாகி இருக்கும்  நிலையில்  முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் நேற்று அளித்த பேட்டியில், ‘உத்தவ் தாக்கரேவை நாங்கள் சந்திப்பதாக இருந்தோம். ஆனால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சந்திக்க இயலவில்லை,” என்றார்.  இதனிடையே, இம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் நேற்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Governor of Maharashtra , Chief Minister of Maharashtra, Corona to the Governor
× RELATED சொல்லிட்டாங்க…