அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல்

கூடுவாஞ்சேரி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் சிபிஐ எம்எல் இந்த கட்சியின் மாவட்ட செயலாளர் ரணியப்பன் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் மொத்தம் 13 பேர்  நேற்று கூடுவாஞ்சேரியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதில், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து ஜிஎஸ்டி  சாலையில் பேரணியாக சென்றனர். அப்போது, கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், நேற்று காலை 10.35 மணியளவில்  அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியவாறு ரயில் மறியல் செய்ய முயன்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: