ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோவில் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே  பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத் (27). இவர், சிவன் கூடல் சாலை சந்திப்பில் உள்ள ஐயனார் கோயிலில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில், பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள  மாம்பாக்கம் தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அவரது தந்தையிடம் கூறியதை அடுத்து பெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது. புகாரின்படி, போலீசார் பிரசாத்தை கைது செய்து விசாரணை செய்ததில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரசாத் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: