மத்திய அரசை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி மத்திய அரசு விசாரணை என்ற பெயரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அலைக்கழிப்பதைக் கண்டித்து திருவள்ளூர் வருமான வரித்துறை அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். நகர தலைவர் வழக்கறிஞர் வி.இ.ஜான் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

புதுடெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களையும், காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநில தலைவர்களையும் தாக்கியதற்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கண்டனம் தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன்,  சி.பி.மோகன்தாஸ், ஜெ.கே.வெங்கடேஷ், தளபதி மூர்த்தி, எஸ்.சரஸ்வதி, பிரபாகரன், ஜே.டி.அருள்மொழி, டி.வடிவேலு, வி.எஸ்.ரகுராமன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories: