கிருஷ்ணகிரியில் இன்று மாலை அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்க விழா

கிருஷ்ணகிரி:ருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், இன்று (22ம் தேதி) மாலை 6 மணிக்கு 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் துவக்க விழா நடைபெறுகிறது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகிக்கிறார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சமயமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். வேளாண்மை துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் வரவேற்கிறார். இதில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் பங்கேற்று, மாங்கனி கண்காட்சியினை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகின்றனர்.

இதில், எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று பேசுகின்றனர். 25 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், தமிழக சுற்றுலாத்துறை, தென்னக கலை பண்பாட்டு மையம், மண்டல கலைப்பண்பாட்டுத்துறை, அரசு சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள், மத்திய அரசின் இசை நாடகப் பிரிவு சார்பில் பல்வேறு மாநிலங்களின் கிராமிய நடன நிகழ்ச்சிகள், திரைப்பட புகழ் நட்சத்திரங்களின் நகைச்சுவை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

Related Stories: