அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் பாலக்கரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். விவசாய சங்க வட்ட தலைவர் கோவிந்தன், மாதர் சங்க வட்ட தலைவர் சந்தனமேரி, இந்திய மாணவர் சங்க வட்டத் தலைவர் சிவானந்த், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வீரமணி, சிஐடியு தலைவர் சேகர், வட்ட தலைவர் ரத்தினசாமி ,வட்ட பொருளாளர் செல்வகுமார்,  வட்ட துணைசெயலாளர் வீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் அசோகன், வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் குமரகுரு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் பரமசிவம் செல்வகுமார், மாநில குழு உறுப்பினர் சின்னதம்பி, மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் அன்புசெல்வி, மாநிலகுழு உறுப்பினர் சின்னத்தம்பி, மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன், மாதர் சங்க வட்ட செயலாளர் ஜெயலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

Related Stories: