குமுதம் வார இதழ் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: குமுதம் வார இதழ் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ப்ரியா கல்யாணராமன் என்ற ராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் என்று முதல்வர் கூறியுள்ளார். குமுதம் இதழை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தியதில் ப்ரியா கல்யாணராமனுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று கூறியுள்ளார்.  ப்ரியா கல்யாணராமனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் தெரிவித்தார்

Related Stories: