×

சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் பொன்முடி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, பொறியியல் சேர்க்கைக்கு இதுவரை 42,716 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பொறியியல் காலியிடங்கள் உள்ளது எனவும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜூலை மாத இறுதியில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது. முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் நிலையில் மாணவர் சேர்க்கைக்கு தாமதம் ஏற்படும்.

இதனால் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்த பின்னர் அடுத்த 5 நாட்களுக்கு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு செய்ய நாட்கள் நீட்டிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Tags : Minister ,Ponmudi ,Information Assistance Center for Engineering Student Admissions ,Chennai Kindi , Minister Ponmudi inspected the Information Assistance Center for Engineering Student Admissions in Chennai Kindi
× RELATED இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றி: அமைச்சர் பொன்முடி உறுதி