கிருஷ்ணகிரி அருகே நாம் தமிழர் கட்சி பிரமுகர் கடத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி குள்ளமுனியன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவசம்பு (35). நாம் தமிழர் கட்சி பிரமுகர். ஆன்லைன் பிசினஸ் நடத்தி வருகிறார். இவரின் மனைவி பிரியா (29). நேற்றிரவு  கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சிவசம்புவும், பிரியாவும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே சென்றபோது, சொகுசு காரில் வந்த 5 பேர் கும்பல், பைக்கை மடக்கி சிவசம்புவை கத்திமுனையில் காரில் கடத்தி சென்றது. அர்ச்சியடைந்த பிரியா, கிருஷ்ணகிரி டேம் போலீசில் புகார் அளித்தார். அதில், சொகுசு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்திமுனையில் தனது கணவரை கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: