பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் அடித்துக் கொலை: பத்தனம்திட்டா அருகே பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முன்ற நபரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கூடல் பகுதியை சேர்ந்தவர் ரஜனி (42). கணவனை விவாகரத்து செய்து விட்டார். தற்போது 18 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த சசிதரன் (50) என்பவருடன் ரஜனிக்கு பழக்கம் ஏற்பட்டது. சசிதரன் அடிக்கடி ரஜனியின் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதற்கிடையே நேற்று காலை ரஜனி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சசிதரன், அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதையறிந்து ரஜினி திடுக்கிட்டு எழுந்தார். ஆத்திரத்தில் அங்கிருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்து சசிதரனின் தலையில் பலமாக தாக்கினார்.

படுகாயமடைந்த சசிதரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். சத்தம் கேட்டு விரைந்து வந்த அந்த பகுதியினர், கூடல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று சசிதரனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிதரன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் ரஜனியை கைது செய்தனர்.

Related Stories: