×

ஈஸ்ட்போர்ன் இன்டர்நேஷனல் டென்னிஸ் பவுலா படோசா, மரியா சக்கரி அதிர்ச்சி தோல்வி: இரட்டையரில் செரீனா ஜோடி வெற்றி

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஈஸ்ட்போர்ன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றில், முதல் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசா, 4-6,3-6 என்ற செட் கணக்கில், இங்கிலாந்தின் ஜோடி அன்னபர்ரேஜிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மற்றொரு போட்டியில், கிரீசின் மரியா சக்கரி 6-3,5-7,4-6 என்ற செட் கணக்கில், உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவுடம் தோல்வி அடைந்தார்.

செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, 6-1,7-6 என குரோஷியாவின் டோகா வெக்சிச்சையும், லத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ 6-4,6-4 என ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கையும், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4,6-3 என சகநாட்டைச் சேர்ந்த லாரன் டேவிசையும் வீழ்த்தினர். மகளிர் இரட்டையரில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், துனிசியாவின் ஓன்ஸ் ஜாபீருடன் இணைந்து களம் கண்டார். இந்த ஜோடி முதல் சுற்றில், 2-6,6-3,13-11 என ஸ்பெயினின் சாரா சொரிப்ஸ் டார்மோ,  செக்குடியரசின் மேரி பவுஸ்கோவா ஜோடியை வென்றது.  ஒரு ஆண்டுக்கு பின் களம் இறங்கிய செரீனா வெற்றியுடன்தொடங்கி உள்ளார்.


Tags : Paula Patosa ,Maria Zacchari ,Eastburn International ,Serena , Eastbourne International Tennis, Paula Badosa, Maria Zachary shock defeat,
× RELATED போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ பவுலா படோசா காலிறுதிக்கு தகுதி