சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் பிறந்தநாள் விழா

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக.நகர் தெற்கு பகுதி 73வது வட்ட திமுக சார்பில், கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு வேருக்கு விழா -22  என்ற நிகழ்ச்சியில், ‘’அன்பின் நிலமானவர், அறத்தின் விதையானவர் போராளியின் புகழரங்கம்’’ என்ற தலைப்பில் புளியந்தோப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு வட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தாயகம்கவி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான ஷாநவாஸ், திக செயலாளர் அருள்மொழி, சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினர் பாலபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட  திமுக செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்பி, பகுதி செயலாளர் சாமிகண்ணு மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: