×

பெரியகுப்பம் நடுநிலைப் பள்ளியில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு பெரியகுப்பத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையில் 275 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர், பள்ளியின் மாடியில் தேங்கியிருந்த மழை நீரை உடனடியாக அகற்ற நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஸ்மார்ட் கிளாஸிலும் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கும் பார்வையிட்டார். ‘‘மாணவர்களின் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும்,  கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஸ்மார்ட் வகுப்பறை இருந்தால் வசதியாக இருக்கும்’’ என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் திரிவேணி கோரிக்கை விடுத்தார்.  ‘‘உங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எம்எல்ஏ உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் வீரராகவன், முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன்.பாண்டியன், நகர் மன்ற உறுப்பினர்கள் சித்ரா விசுவநாதன், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி மற்றும் நகராட்சி பொறியாளர் நாகராஜன், ஓவர்சியர் சீனிவாசன் உள்பட பலர் இருந்தனர்.


Tags : VG ,Rajendran ,MLA ,Periyakuppam Middle School , Periyakuppam Middle School, VG Rajendran MLA, Research
× RELATED ரூ.33 கோடி மதிப்பில் வேடங்கிநல்லூரில்...