×

சிதம்பரம் நடராஜர் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சிவ பக்தர்கள் கனகசபை மீது ஏறி தேவாரம் பாடி மகிழ்ச்சி

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு உடன் மக்கள் அதிகாரம் அமைப்பினர், சிவ பக்தர்கள் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாடினர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் தடை விதித்து வந்தனர். இந்த தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் தீட்சிதர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஏராளமான பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வந்தனர். அதேநேரம், கனகசபையில் ஏறி மக்கள் தேவாரம், திருவாசகம் பாடினர்.

இந்நிலையில், தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு தீட்சிதர்கள் இடையூறு ஏற்படுத்துவதாகவும், தடுப்பதாகவும் கூறி பல்வேறு அமைப்புகள் இந்துசமய அறநிலையத்துறைக்கு புகார்கள் அனுப்பினர். தமிழக அரசும் இது குறித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், நேற்று இந்துசமய அறநிலையத்துறை ஒரு அறிக்கை எழுதி கோயில் தீட்சிதர்களுக்கு அனுப்பியது. அதில், தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு தடை விதிக்கக் கூடாது; அதுபோல் தேவாரம் பாடச் செல்பவர்கள் கோயிலில் அனுமதி பெற்று, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் தேவாரம், திருவாசகம் பாடலாம்.

ஒவ்வொரு கால பூஜைக்கு பின்னரும் தேவாரம் பாடுவதற்கு அனுமக்கவேண்டும் என்பது போன்ற உத்தரவுகளை இட்டு கடிதங்களை அனுப்பியது. இந்நிலையில், இன்று நடராஜர் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தேவாரம் பாடுவதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் சிவனடியார்கள் சிலரும் கோவிலுக்கு வந்தனர். அவர்களை காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் பாதுகாப்பாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்குள்ள கனகசபை மீது ஏறிய அவர்கள், கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடினர்.

பின்னர் கீழே இறங்கிய அவர்களை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். சிதம்பரம் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்தவரை கடலூர் ஏடிஎஸ்பி அசோக் குமார், 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார் கோயில் வெளிப்பிரகாரம் மற்றும் உட்பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பது பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Shiva ,Kanakasabhab ,Chidambaram Natarajar temple ,Dewaram Badi , Chidambaram, Natarajar Temple, Police Security, Shiva Bhaktar, Kanakasabai, Thevaram
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு