ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல்காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி விசாரணை என்ற பெயரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அலைக்கழிப்பதைக் கண்டித்தும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் திருவள்ளூர் வருமான வரித்துறை அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். நகர தலைவர் வழக்கறிஞர் வி.இ.ஜான் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. புதுடெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களையும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநில தலைவர்களையும் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், சி.பி.மோகன்தாஸ், ஜெ.கே.வெங்கடேஷ், தளபதி மூர்த்தி, எஸ்.சரஸ்வதி, பிரபாகரன், ஜே.டி.அருள்மொழி, டி.வடிவேலு, வி.எஸ்.ரகுராமன்,  ஆல்பர்ட் இன்பராஜ், வட்டார தலைவர்கள் முகுந்தன், ஜி.எம்.பழனி, மற்றும் வி.எம்.தாஸ், கலீல்ரஹ்மான், ஜோதி, சுதாகர், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: