×

நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் பழுது ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் பழுது ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
நெம்மேலியிலுள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் திடீர் பழுது ஏற்பட்டதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மயிலாப்பூர், மந்தவெளி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட்நகர், திருவான்மீயூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை,சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள மயிலாப்பூர், மந்தவெளி பகுதிக்கு 8144930909, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட்நகர், திருவான்மியூர் பகுதிக்கு 8144930913, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பகுதிக்கு 8144930914, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பகுதிக்கு 8144930915 ஆகிய எண்களில் பகுதிப் பொறியாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nemmely Sea Water Treatment Plant ,Chennai , Nemmely Sea Water Treatment Plant, Sudden Repair, Drinking Water Supply Stop, Chennai Drinking Water Board Information
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...