×

திருப்பத்தூர் சு.பள்ளிப்பட்டு துவக்கப்பள்ளியில் வெள்ள நீர் புகுந்ததால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் சு.பள்ளிப்பட்டு ஊராட்சி துவக்கப்பள்ளியில் கழிவுநீர் பள்ளி வளாகத்தில் புகுந்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாததால் மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியம் சு.பள்ளிப்பட்டு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் தாயப்பன் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 2 உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளது.

இங்கு இருக்கும் மாணவ மாணவிகளுக்காக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தர்மபுரி ரயில்வே மேம்பாலம் அருகே 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த பள்ளிகள் 54 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி ஒதுக்குப்புறமாக இருப்பதால் அங்கு பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ள நீர் புகுந்தது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது இந்த வெள்ள நீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் பள்ளி சுற்றுச்சூழல் காம்பவுண்ட் சுவரை உடைத்து பள்ளி வளாகத்திற்குள் தண்ணீரை திருப்பி விட்டது. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் கழிவுநீர் மற்றும் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. பள்ளியின் நுழைவாயிலில் மாணவர்கள் செல்லக்கூடிய பாதை அனைத்தும் சேரும் சகதியுமாக உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 இந்த வெள்ள நீர் இடுப்பளவு இருப்பதால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை  மாணவர்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். அதனால், பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உள்ள காரணத்தினால் அருகே உள்ள மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அலுவலக கட்டிடத்தில் வெட்டவெளியில் கரும்பலகை இல்லாமலும் வெயிலில் மாணவர்கள் இரண்டு நாட்களாக கல்வி பயின்று வருகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த பள்ளியை ஆய்வு மேற்கொண்டு கழிவு நீரை திருப்பி விட்டு பள்ளி வளாகத்திற்குள் திருப்பி விட்ட ஊராட்சி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Tirupattur Primary School , Tirupati: Sewage in Tirupati Pallipattu Panchayat Primary School could not reach the school premises as students could not go to school.
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்...