×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனந்தபூரில் மாதிக குலம் சார்பில் வரும் 10ம் தேதி மாநாடு -சித்தூரில் போஸ்டர் வெளியீடு

சித்தூர் :   சித்தூர் மாதிக குல சங்க அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10ம் தேதி அனந்தபூரில் நடைபெறும் மாநாட்டிற்கான போஸ்டர் வெளியீடு நேற்று நடைபெற்றது.சித்தூரில் மாதிக குல சங்கம் சார்பில் மாதிக குல மாநில ஊழியர் சங்க தலைவர் சுப்பா ராவ் தலைமையில் ஜூலை 10ம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கான போஸ்டர் வெளியீடு விழா நேற்று நடைபெற்றது. பின்னர் அவர் பேசுகையில், ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது மாநிலத்தில் உள்ள மாதிக குல மக்களுக்கு மாநில அரசு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை. அதேபோல் அரசுத்துறையில் இட ஒதுக்கீடும் வழங்கவில்லை.

இதுகுறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாநில அரசை கண்டித்து மாதிக குல சங்கம் சார்பில் அடுத்த மாதம் ஜூலை 10ம் தேதி ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தாடி பத்திரி நகரத்தில் மாபெரும் மாநாடு நடைபெறும். இந்த பொதுக்கூட்டத்திற்கு சித்தூர் மாவட்டத்தில் இருந்து அனைத்து மாநில மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றியடையச் செய்ய வேண்டும்.

 இந்த மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதிக குல வகுப்பை சேர்ந்த பல தலைவர்கள் பேச உள்ளார்கள். முக்கியமாக மத்திய அரசு வழங்கும் நிதியை மாதிக குல வகுப்பை சேர்ந்த மக்களின் நலத் திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாநில மக்களுக்கு சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனந்தபூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளோம்.

 ஆகவே சித்தூர் மாவட்டம் முழுவதும் அனைத்து மண்டலங்களில் இருந்து அனைத்து கிராமங்களில் இருந்து அனைத்து நகரங்களிலிருந்தும் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில், சங்க தேசிய பொதுச்செயலாளர் தனஞ்செய், சித்தூர் மாவட்ட தலைவர் குரு சங்கர் பிரசாத், துணை தலைவர் முருகையா, பொதுச்செயலாளர்  ஹனுமந்து, தலித் சங்க தலைவர் பாலகிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : 10th Conference ,Madhya Pradesh ,Anantapur ,Chittoor , Chittoor: The Chittoor Mathika Kula Sangam office has stressed various demands for the conference to be held on July 10 in Anantapur.
× RELATED இந்திரா காந்தியின் சொத்துக்களை...