மக்களை தேடி மருத்துவம் திட்டம்: தமிழ்நாட்டில் இதுவரை 75 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகம் விநியோகம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

சேலம்: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 75 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்ற பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தொலைதூர மலை கிராமங்களுக்கும் மருத்துவ சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

யோகா பயிற்சி செய்வதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவங்கள் அதிகரிக்கும் என கூறினார். மக்கள் அனைவரும் உடல்நலத்தை ஆரோக்கியதுடன் வைத்துக் கொண்டால் எந்த நோயும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் அறிவுரை வழங்கினார். மாரத்தான் போட்டியில் நாட்டின் 36 மாநிலங்களில் 21 கி.மீ. தூரம் ஓடிய ஒரே நபர் என்ற சாதனையை விரைவில் எட்டுவேன் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

Related Stories: