×

மன்னார்குடி நகராட்சி சாலைகளில் சுற்றித்திரிந்த 55 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்-நிர்வாகம் அதிரடி

மன்னார்குடி  : மன்னார்குடி நகரத்தில் பல்வேறு பகுதிகளில் தனிநபர்களால் மாடுகள் வளர் க்க படுகிறது. இந்த மாடுகள் காலை முதல் இரவு வரை நகரத்தில் சுற்றி திரிவதோடு இரவு நேரங்களில் பிரதான சாலைகளில் படுத்து விடுகின்றன சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மாடுகளால், வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.
போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும், சாலை யில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, மாட்டின் உரிமையாளர்களுக்கு அப ராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தது வந்தனர்.

இதையடுத்து, மாடுகளை வளர்ப்போர் அவரவர் இடங்களில் மாடுகளை அடை த்து வைத்து பராமரிக்க வேண் டும். மீறினால் போக்குவரத்துக்கு இடையூ றாக சாலையில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகர் மன்ற கூட்டத்தில் அதன் தலைவர் மன்னை சோழ ராஜன் அறிவுறுத்தலின் பேரில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இந்த நிலையில் நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், நகராட்சி ஆணை யர் சென்னு கிருஷ்ணன் ஆகி யோரின் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக சாலைகளில் சுற்றித்திரிந்த 50 மாடுகளும், இரண்டாம் கட்டமாக நேற்று சாலைகளில் சுற்றித்திரிந்த 55 மாடுகள் நகராட்சி பணியாளர்கள் மூலம் பிடி க்கப்பட்டது.

இப்பணிகளை, நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன், நகராட்சி மண் டல பொறியாளர் பார்த்தீபன், நகரா ட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், நகர் மன்ற துணைத்தலைவர் கைலாசம், பொறியாளர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், வெங்கடாசலம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர், மாட்டின் உரிமை யாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன் கூறுகையில், பிடி பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் வரவழைக்க பட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்க பட்டது. பொது மக்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது ஆகும். எனவே, இதுபோன்ற நடவடிக்கை தொடரும். சம்பந்தப்பட்டவர்கள் நகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக் கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags : Mannargudi Municipal Roads , Mannargudi: Cows are reared by individuals in various parts of Mannargudi. These cows are from the morning
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...