ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

வேலூர் : ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. காலை 11 மணியளவில் கல்லூரி கலையரங்கில் நடந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு கல்லூரி தலைவர் கே.ஆர்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் கே.பி.கிஷண்குமார், முதல்வர் வ.விஜயலட்சுமி, துணை முதல்வர் நி.மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

யோகா பயிற்சியாளர்களாக எஸ்.மாலதி, டி.கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்லூரி, வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரி, வேலூர் ஆக்சீலியம் கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை பயிற்சியாளர் அச்சுதன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் கே.சங்கீதா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ்.அஸ்வினி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை கல்லூரி தலைவர் கே.ஆர்.பாஸ்கரன், துணைத் தலைவர் கே.பி.சுமலதா பாஸ்கரன், செயலாளர் கே.பி.கிஷண்குமார், மேலாண்மை கல்லூரி இயக்குனர் ஷீபா கிஷண்குமார், முதல்வர் வ.விஜயலட்சுமி, துணை முதல்வர் நி.மைதிலி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: