தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை..!

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம நபர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு காலை தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் ஆகியவற்றுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். ரயில்வே போலீசார் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில்வே பிளாட்பாம், தண்டவாளம் உள்ளிட்ட தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய போதும் வெடிகுண்டு சிக்கவில்லை. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண் எங்கிருந்து பேசப்பட்டது ? என்பது  குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: