செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 250 கன அடியிலிருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.  கரையோரத்தில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக,  ஏரியின் நீர் வரத்து வினாடிக்கு 775 கன அடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: