எரியாத மின் விளக்குகளால் இருளில் மூழ்கும் கிழக்கு கடற்கரை சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னை - புதுச்சேரி இடையே உள்ள கிழக்கு கடற்கரை சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் இந்த சாலையில், மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலத்தில் இருந்து திருவிடந்தை பகுதி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியனில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ள வகையில் இருந்தது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்த மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் சாலை இருளில் மூழ்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறியபடி செல்வதுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.  எனவே, இச்சாலையின் முக்கியத்துவம் கருதி, அனைத்து மின் விளக்குகளும் இரவு நேரங்களில் பிரகாசமாக எரியும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வானக ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுத்தி உள்ளனர்.

Related Stories: