×

எம்டிசி பஸ்சில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு இலவச டோக்கன்

சென்னை: எம்டிசி பேருந்துகளில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்  விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், 60 வயதுக்க மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2022 ஜூன் மாதம் வரை பயணம் செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அடுத்த அரையாண்டிற்கு, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் 40 மையங்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று முதல் விநியோகம் தொடங்கியது. இது வரும் 31.7.2022 வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர், 1.8.2022 முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும். இதனை பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டையின் நகல், 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.





Tags : MTC , To travel by MTC bus Free token for senior citizens
× RELATED தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில்கள்...