×

பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், திருவான்மியூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர்வாரியம் அறிவிப்பு

சென்னை: நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுது பார்க்கும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று  சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை குடிநீர்வாரியம் வெளியிட்ட அறிக்கை: நெம்மேலியிலுள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பழுது பார்க்கும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதால், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்குநேற்று இரவு  10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.  மேலும் அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள கீழ்க்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். பகுதிப் பொறியாளர், பகுதி-9 செல்போன் எண் 8144930909, மயிலாப்பூர், மந்தைவெளி, பகுதிப் பொறியாளர், பகுதி-13, செல்போன் எண் 8144930913, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர், பகுதிப் பொறியாளர், பகுதி-14, செல்போன் எண் 8144930914, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பகுதிப் பொறியாளர், பகுதி-15, செல்போன் எண் 8144930915  ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    



Tags : Mylapore ,Thiruvanmiyur , Due to maintenance work Drinking Water Supply Suspension in Mylapore, Thiruvanmiyur: Notice by the Drinking Water Board
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது