×

யூடியூப் சேனலில் வௌியிட மாணவர்களுக்கு களரி பயிற்சி மயங்கி விழுந்து மாஸ்டர் சாவு

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே தனியார் யூடியூப் சேனலில் வெளியிட மாணவர்களுக்கு களரி பயிற்சி அளித்த மாஸ்டர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன்(29). மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் களரி பயிற்சி மையம் நடத்தி வந்தார். இவர், நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் மாணவர்களுக்கு களறி பயிற்சி அளித்து வந்தார். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலில் களரி பயிற்சியை பதிவு செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிரிதரன் நேற்று முன்தினம் ஆன்லைன் மூலம் தனது பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு களரி பயிற்சி அளித்துள்ளார். அப்போது திடீரென வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்துள்ளார். பயிற்சி மைய நிர்வாகிகள், அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த மதுரவாயல் போலீசார், கிரிதரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெஞ்சுவலியால் இறந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரிக்கின்றனர்.


Tags : YouTube , Master death after falling in love with college students on YouTube channel
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்