×

ஆர்.கே.பேட்டை வட்டத்தில் வேளாண் அபிவிருத்தி திட்ட பணிகள்: இயக்குனர் ஆய்வு‌

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை நேற்று ஆய்வு‌ மேற்கொண்டார். ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில் எஸ்.வி.ஜி.புரம், ஜி.சி.எஸ்.கண்டிகை ஆகிய கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவசாய குழுக்களுக்கு பல்வேறு துறைகள் மூலம் வழங்கப்பட்டுள்ள இடுபொருட்கள் ஆழ்துளை கிணறு, தென்னை நடவு, பண்ணை குட்டை பணிகள் குறித்து வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வேளாண்மை மாவட்ட இணை இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் எபினேசர், உதவி இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அனி, வேளாண்மை  உதவி இயக்குனர் இளங்கோவன், வேளாண் அலுவலர் ரூபா, ஊராட்சி மன்ற தலைவர் சத்திய நாராயண ராஜு உள்பட வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags : RKpet Circle , Agricultural Development Project Works in RKpet Circle: Director Review‌
× RELATED நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது